Thursday, March 13, 2008
Wednesday, March 12, 2008
இடை ஒடிந்துவிட்டால்...
Tuesday, March 11, 2008
இன்னும் நீ வரவில்லை

புன்னகையை சுமந்து வரும்
என்னவளுக்காக காத்திருக்கிறேன்...
புத்தம் புதியதாய் பூத்த அழகிய ரோஜா மலருடன்...!
இன்னும் நீ வரவில்லை.....!..?
கண்டிப்பாக வந்துவிடுவேன்
என்று நீ சொன்ன அந்த வார்த்தை
எனை கணப்பொலுதும் கண்மூடவிடவில்லை...
விடியலுக்காக காத்திருந்து காத்திருந்து
கடினப்பட்டு காலத்தை கடத்திகொண்டிருந்தது
இந்நேரத்திற்காகத்தான்...
இன்னும் நீ வரவில்லை.....!..?
மணித்துளிகள் தான் கடந்து கொண்டிருக்கிறது...
என்னை விட ரோஜாமலர் தான் அதிகம் வருத்தப்பட்டது
உன்னைக் காணாமல்....!
கடிகாரம் கூட என்னை நோக்கி கேலி செய்கிறது
எந்த ஓசை கேட்டாலும் அது நீ வரும் ஓசைதானென்று
நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து எத்தனை முறைதான் ஏமாந்து போவது...
இன்னும் நீ வரவில்லை.....!..?
ஆ....
என்னவளின் கொலுசொலி கேட்கிறது..
கடவுளை வேண்டிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தால்...!
வந்து கொண்டிருக்கிறாய்...
காத்திருந்து உன்னை பார்ப்பதில் தான் எவ்வளவு உற்சாகம்...!
சூரியனை விட பிரகாசமான முகம் !
நடையில் நளினம் !
இடையில் எழினம் !
மேலொகத்தில்
தேவகண்ணிகளுடன் பிறக்க வேண்டிய நீ
தவறி
பூலோகத்தில் பிறந்து விட்டாய்...!
உன் புன்னகை தான் என் பூர்வீக சொத்து....!
என்னருகில் வருகிறாய்...
உன் நடையழகைக் கண்டு எவ்வளவு கவிதைகள் தான் எலுதுவது....
பிரம்மன் மோகத்தில் இருக்கும் பொலுது
உன்னை படைத்திருப்பான் போல....
எத்தனை முறைதான் என்னை உனக்கு அர்பணிப்பது....!
ஏன் இந்த ரோஜாவின் அழகு திடிரென்று குறைந்துவிட்டது...
உன்னைக் கண்டதாலோ...
அது வெட்கி வாடுவதற்குள்
உன் தலையில் சூடி விடுகிறேன்...வா...
அட இந்த ரோஜா எவ்வளவு ஆனந்தத்தில் துள்ளுது பார்....
ஆ.....!
என்ன.?
தலையில் முள் ஏரிவிட்டதா...?
இல்லை இல்லை ....
என் விரல்களில்தான் முள் ஏறிவிட்டது..
மீண்டும் என் கடிகாரம் என்னை கேலி செய்கிறது...!
இன்னும் நீ வரவில்லை.......?


