Wednesday, March 12, 2008

இடை ஒடிந்துவிட்டால்...

" கொய்த மலரைக் கொடுங்கையி னால்அணைத்து
மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவைஇடைக்(கு)
ஆதாரம் இன்மை அறிந்து.
--நளவெண்பா.
[ கவிதைகள்...
உண்மையை அலங்கரிக்கும் பொய்கள் !
உண்மைதான்...
பூத்துக் கிடக்கும் மலர்களைக் காதலன் தன்
காதலியின் கூந்தலில் சூட்டவென்று
கை நிறையப் பறிக்கிறான்...
மலர்ச்சுமை தாங்காது இடை இடை ஒடிந்துவிட்டால்...
உள்ளம் அஞ்சுகிறது.முடிவில்...
காதலியின் பாதங்களுக்கே..அந்த மலர்களைச் சூட்டி மகிழ்கிறான் !
நிடத நாடு செல்லும் நளன்தமயந்திக்குக் காட்டும் இனிய காட்சிகளில்இதுவும் ஒன்று...]

1 comment:

Anonymous said...

மலர்ச்சுமை தாங்காது இடை இடை ஒடிந்துவிட்டால்...
உள்ளம் அஞ்சுகிறது.முடிவில்...
காதலியின் பாதங்களுக்கே..அந்த மலர்களைச் சூட்டி மகிழ்கிறான் !

ithuthaan kaathalo